Saturday 27 July 2013

Chocolate Burfi


சுவையான சாக்லேட் பர்பி செய்வது எப்படி?


 Chocolate Burfi


Chocolate Burfi - 1

சாக்லேட் பர்பி சுவையானது.  தின்னத்தின்ன ருசியானது.  மிகவும் சுலபமாகவும், சிக்கனமாகவும்,  குறைந்த  பொருள் செலவிலும் செய்யலாம். 

தேவையான பொருட்கள்:

1. பால் 2- லிட்டர்
2. சர்க்கரை 2-கப்
3. சாக்லேட் பவுடர் 2-ஸ்பூன்


செய்முறை:

வாணலியில் பாலை ஊற்றி நன்றாக காயவைத்த பின் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். பால்  அடிப்பிடிக்காமல் இருக்க  அடுப்பை மிதமான  சூட்டில் வைக்கவும். பால் நன்றாக கெட்டியாகி கோவா பதம் வரும் வரை கிளறவும். பின்  இறக்கி வைத்து ஆறவைக்கவும்.
பாதியளவு கோவாவை எடுத்து அதனுடன் சாக்லேட் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.  பின்பு,

முதலில் ஒரு ட்ரேயில் கோவா கலவையை பரப்பி நன்றாக ஆற வைக்கவும்.

அடுத்து அந்த கோவா கலவையின் மேல் சாக்லேட் கோவா கலவையை பரப்பி சில மணி  நேரம் கழித்து தேவையான அளவுகளில் துண்டுகளாக வெட்டினால் சாக்லேட் பர்பி ரெடி.

மேலும் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு போன்றவற்றால்  அலங்கரித்து பரிமாறலாம்.




No comments:

Post a Comment