Thursday 19 December 2013

How to make Sathu Maavu Seedai?

ருசியான சத்து மாவு சீடை செய்வது எப்படி?

நமது தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சத்து மாவு இலவசமாக கொடுக்கிறது. அதை விதம் விதமாக பலகாரம் போன்று செய்து சாப்பிட மிகவும் ருசியா இருக்கும்.

இப்போது நாம் இங்கே  எப்படி சத்து மாவு சீடை செய்வது என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

  • சத்துமாவு ஒரு கப் 
  • தண்ணீர் தேவையான அளவு 
  • என்னை பொரிக்க தேவையான அளவு 

செய்முறை:

சத்துமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல்  பிசைந்து  கொள்ளவும்.  அந்த மாவை  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்  கொள்ளவும்.   ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி சூடு செய்யவும். சூடானதும் அந்த உருண்டைகளை போட்டு  பொன்னிறமாக  பொறித்து எடுக்கவும். 

பொரித்த சீடைகளை ஒரு தட்டில் போட்டு  ஆறவைக்கவும். இப்போது சூடான, சுவையான சீடை ரெடி. 

சீடைகளை  உருண்டைகளாக  பிடிப்பதை தவிர வேறு பல வடிவங்களிலும் வெட்டி பொறித்து எடுக்கவும். உதாரணமாக முக்கோண வடிவம், சதுர வடிவம்,  நட்சத்திர வடிவம் போன்றவை.

தேவையானால் சிறிது எஸ்சென்ஸ்  சீடை தயார் செய்யலாம்.